செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Wednesday, November 29, 2006
தமிழீழத் தனியரசு அமைந்தால் மகிழ்ச்சியடைவேன் - கலைஞர்
தேசியத் தலைவர் சுதந்திரத் தமிழீழம்; பெற்றால் தான் மகிழ்ச்சியடைவேன் என தமிழக முதல்வர் மு.கருணாநிதி இன்று ஊடகர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை தொடர்பில் இன்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடம் சென்னையில் இன்று ஊடகர்கள் கேட்டபோது, இது குறித்து தான் பல ஆண்டுகளிற்கு முன்பே கருத்துத் தெரிவித்திருக்கிறேன். அவர்(தலைவர் பிரபாகரன்) சுதந்திரத் தமிழீழம் பெற்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.

அதற்கிடையில் இருக்கிற ஈழத்தமிழ் மக்கள் எத்தகைய படுகொலைகளிற்கும் ஆளாகமல் ஏதாவது ஒரு மாற்று இரு சாராரும் இணைந்து கண்டுபிடுத்து அதில் ஒரு உடன்பாடு ஏற்பட்டு, அங்கு அமைதி ஏற்படுமானால் அதற்கும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-சங்கதி
posted by தமிழினி @ 11:03 PM   3 comments
விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தவறு - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்தார்.

புஷ் அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்ரனைத் தளமாகக்கொண்டு இயங்கி வரும் The Humanitarian Law Project என்ற சட்ட நிறுவனம் இந்த வழக்கினை வாதாடியது.

இந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் கோல் இந்த வழக்கின் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி புஷ், தனது அதிகாரத்தின் வாயிலாக இந்தத் தடையை பிரயோகித்திருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பின் மூலம் பட்டியலிடப்பட்ட ஏனைய குழுக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்று எனத் தெரிவித்த டேவிட் கோல், ஆனால் இந்த பட்டியல் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட தீர்ப்புக் குறித்து விடுதலைப்புலிகள் மற்றும் குர்டிஸ்தான விடுதலை அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக அமெரிக்க நீதிநிர்வாக அமைச்சின் பேச்சாளர் சாள்ஸ் மில்லர் கருத்து தெரிவிக்கும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாகவும், அமெரிக்க அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தீர்ப்புக் குறித்து எந்தவித கருத்தினையும் தெரிவிப்பதற்கு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
posted by தமிழினி @ 12:33 AM   0 comments
Tuesday, November 28, 2006
சிறிலங்கா அரசு கருணா படையினரால் சிறுவர்கள் கடத்தப்படுவதை தடுக்கவேண்டும் -மனித உரிமைகள் குழு
சிறிலங்கா பாதுகாப்பு படையினர் உடனடியாக சிறுவர் மற்றும் இளைஞர்கள் கருணா குழுவினரால் கடத்தத்தபடுவதை தடுக்க வேண்டும். எனவும் அத்துடன் கடத்தபடுபவர்களை மீட்டு அவர்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக சேர்த்துவிடவேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைப்பு இன்று செவ்வாய்கிழமை விடுத்த அறிகையில் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அமைபான கியுமன் ரைட் வாட்ச்(Human right watch) அடுத்த மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறிலங்கா அரசப்படையினர் மற்றும் பொலிஸார் சிக்கலடைந்துள்ள நிலையில் அதே நேரம் நேரடியாக சிறுவர்கள் கருணா படையினரால் கடத்தபடுவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்..எனவும் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி மற்றும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. .

அமெரிக்காவின் நியுயோக்கினை தளமாக கொண்டமைந்த இந்த மனித உரிமைகள் அமைப்பு -"தம்மிடம் சிறுவர்கள் கருணா படையினரால் கடத்தபடுவதற்கு நேரடியாக சிறிலங்கா பாதுகாப்பு படையினர் உடந்தையாக இருந்துள்ளனர்.என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும் "தெரிவித்துள்ள இந்த அமைப்பின் சிறுவர் நலன் உரிமைகள் வழக்கறிஞர் ஜொ பெக்கர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐ.நா சிறார் உரிமைகள் நலன் பிரதிநிதி அலன்றொக் இதே கருத்தினை தனத் 10 நாள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
posted by தமிழினி @ 7:18 PM   0 comments
Monday, November 27, 2006
மட்டகளப்பு பகுதியில் இராணுவ முன்னரங்குகள் மீது புலிகள் தாக்குதல்-இராணுவம்
நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையினை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையில் உக்கிரமான ஷெல் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடைபெறுவதாக இராணுவ தரப்பு செய்தி மேற்கோல்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

152mm உடைய ஆட்லறி ஷெல் குண்டுகள் தமது பகுதியில் அதிகமாக வீழ்ந்து வெடுத்துள்ளதாகவும் புலிகள் முதன்முறையாக இந்த ஆயுத பாவனையை பயன்படுத்தி வருகிறார்கள் எனவும் இராணுவ முன்னரங்கள் மீது பல ஷெல்கள் வீழ்ந்து வெடித்தமையால் இரு இராணுவ வீரர் பலியானார் இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் இரானுவ தெரிவித்துள்ளது..

எங்களுடைய முன்னரங்க மோட்டார் குண்டுகளினாலும் எறிகணைகளினாலும் தாக்குதலுக்குள்ளகியுள்ள்து. தொடர்ந்து புலிகள் அதி பயங்கரமாக ஆயுதங்கள் முலம் நமது பகுதியை தாக்குகிறார்கள் என இராணுவ தரப்பில் பேசவல்ல் அதிகாரியான உபாலி ராஜபக்ஷ ரொய்ட்டருக்கு தெரிவிதுள்ளார் இத்தாகுதல் குறித்து விடுதலைப்புலிகளின் தரப்பில் எந்த செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை..
posted by தமிழினி @ 11:37 PM   0 comments
புலிகளின் தலைவரின் உரை பல கேள்விகளை எழுப்பியுள்ளது - கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர்
கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது மாவீரர் தின உரையினை மிகவும் ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்துவருகின்றோம் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் உரையை, இலங்கையில் அரசும் விடுதலைப் புலிகளும் 2002 ஆம் மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகின்றதா எனக் கண்காணிக்க வந்த அமைப்பு என்ற ரீதியில் நாம் மிக ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்ததோடு எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப் பீடத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அவர்களின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பது பற்றி பேசத் தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் 2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்க இங்கு உள்ள கண்காணிப்பு அமைப்பு என்ற ரீதியில் இந்த உரைக்கான விளக்கத்தை நாம் புலிகளிடம் கோரவுள்ளோம். அதாவது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க புலிகள் இன்னமும் அர்ப்பணிப்போடு இருக்கின்றார்களா? இது குறித்த அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக பேச முடிவு செய்துள்ளோம்.புலிகளின் தலைவரின் உரையை நாம் மிகக் கவனமாக ஆராய்ந்துள்ளோம்.

இந்த உரை எமக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப்பீடத்துடன் இது குறித்து தெளிவாகப் பேசவுள்ளோம்.
posted by தமிழினி @ 11:32 PM   0 comments
காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு.

*காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு.

*தாவடியில் வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு.

*அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொலை - சகோதரி படுகாயம்.

**********யாழ்ப்பாண அவலங்கள்***********

காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு தினங்களாகக் காணாமற் போயிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை இருபாலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்தவரான சங்கரப்பிள்ளை செந்தூரன் (வயது23) என்பவரே சடலமே மீட்கப்பட்டுள்ளார்.


இவர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பின்னர் காணாமற் போயிருந்தார். நேற்றுக் காலை இவரின் சடலம் இருபாலை விளையாட்டரங்கு வீதியில் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய்ப் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப் படைத்துள்ளனர்.

தாவடியில் வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு.

யாழ்ப்பாணம் தாவடி வடக்கில், இணுவில் பாலா வோடைப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இரு இளைஞரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் கொட்டடி,கோண்டாவில் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.


இவர்களில் கழுத்து மற்றும் கைகள் வெட்டப்பட்டிருந்தன என்றும் இருவரது சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மல்லாகம் நீதவான் திருமதி. ச.இளங்கோவன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் விசாரணைகளை நடத்தியுள்ளார்.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொலை - சகோதரி படுகாயம்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகள் காரணமாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் அகதிமுகாம்களில் வாழ்ந்து வந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினருடன் அதனோடு சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரினால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


இதே வேளை வெள்ளை நிறவாகனத்தில் வந்திறங்கிய சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இச் சூட்டுச் சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் சகோதரர்களான மரியதாஸ் யூலி (32) அத்துடன் மரியதாஸ் யூலியஸ் (30) என்ற இருவருமே கொல்லப்பட்டுள்ளது. இவர்களது சகோதரியான மரியதாஸ் யஸ்மினி (32) என்ற பெண்மணியே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

posted by தமிழினி @ 11:15 PM   0 comments
Thursday, November 23, 2006
இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவைப் பாதிக்கும்.
இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்தியாவின் தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேவை ஒன்று நேயர்களின் கருத்தை அறியும் தொலைக்காட்சி கருத்து கணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மூலம் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.



இலங்கையில் மீண்டும் போர் மூழுமானால் அதனால் இந்தியாவுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படுமா இல்லையா என்பது குறித்தே அக் கருத்துக் கணிப்பு நடைபெறுகிறது.



நேற்று மாலை வரை இணையத் தளம் மற்றும் கையடக்க தொலைபேசி குறுந்தகவல்கள் மூலம் கருத்துக்களை தெரிவித்;துள்ள 63.2 வீதமானவர்கள் இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவை நேரடியாக பாதிக்கும் என தெரிவித்துள்ளனர். இதில் 36.8 வீதமானாவர்கள் பாதிப்புக்கள் ஏற்படாது என குறிப்பிட்டுள்ளனர்.

.

இலங்கையில் போர் மூழும் ஆபத்து காணப்படுவதாகவும் அரசியல் ரீதியான தீர்வு முயற்சிகளுக்கப்பால் இராணுவ ரீதியிலான தீர்விலேயே முனைப்புகள் வெளிப்படுவதாகவும்; இந்த இந்திய தொலைக்காட்சி நிகழ்வில்; ஆராயப்பட்டதாகவும் கடந்த ஒரு சில நாட்களாக இந்த தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட அரசியல் கள நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பினரின் செவ்விகளை ஒளிபரப்பியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
posted by தமிழினி @ 12:48 AM   0 comments
இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கானசூழ்நிலையை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் - மு.கருணாநிதி
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கான சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.



தமிழக அரச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த கருணாநிதி அங்கு மேலும் கூறியதாவது:

அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதையும் அவர்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து இம்சைப்படுத்துவதையும் இலங்கை அரசு நிறுத்தி சமாதானத்திற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இப்பிரச்சினையை மத்திய அரசாங்கத்தின் முக்கிய கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண சமாதான பேச்சுவார்த்தை மூலமான உபாயங்களை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
posted by தமிழினி @ 12:41 AM   0 comments
இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கானசூழ்நிலையை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் - மு.கருணாநிதி
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கான சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.



தமிழக அரச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த கருணாநிதி அங்கு மேலும் கூறியதாவது:

அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதையும் அவர்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து இம்சைப்படுத்துவதையும் இலங்கை அரசு நிறுத்தி சமாதானத்திற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இப்பிரச்சினையை மத்திய அரசாங்கத்தின் முக்கிய கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண சமாதான பேச்சுவார்த்தை மூலமான உபாயங்களை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
posted by தமிழினி @ 12:41 AM   0 comments
Tuesday, November 21, 2006
மோசமான புற்றுநோயால் அன்டன் பாலசிங்கம் பாதிப்பு
லண்டன், நவ. 22
விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் மோசமான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். உட லின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ள நிலையில் இனிக் குணப் படுத்த முடியாத உபாதைக்குள்ளும், பிணிக் குள்ளும் அவர் சிக்கியிருக்கின்றார்.

அறுபத்தெட்டு வயதாகும் அன்ரன் பால சிங்கம் கடந்த 35 வருடங்களாக நீரிழிவு நோய் காரணமாக அவரது இரு சிறுநீரகங் களும் ஒன்றன் பின் ஒன்றாகச் செயலிழந்து போக, போராளி ஒருவரிடமிருந்து தான மாகப் பெற்ற ஒரு சிறுநீரகமே இப்போது அவரது வாழ்வுக்குத் தாக்குப் பிடிக்கின்றது.

நீரிழிவு, சிறுநீரகச் சிக்கல், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவற்றுடன் தமது அரசியல் பணிகளை தீவிர வைத் திய சிகிச்சைகளுக்கு மத்தியில் மேற்கொண்டு வந்த அவர் கடந்த எட்டு, ஒன்பது மாதங் களாகக் கடும் நோயால் அவதிப்பட்ட நிலை யில் அரசியல் பணிகளைத் துறந்து ஒதுங்கி யிருக்கிறார் என்பதும் தெரிந் ததே.

அவருக்குப் புற்றுநோய் மோசமாகப் பரவியிருப்பதை டாக்டர்கள் கடந்த வாரம் தான் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச் சைகள் எங்கும் புற்றுநோய் பரவியுள் ளதை உறுதிப்படுத்தியுள்ள வைத்தியர் கள் அது சுமார் ஒரு வருட காலத்துக்கு முன்னர் உருவாகி, உடல் எங்கும் பரவத் தொடங்கியிருக்கலாம் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
புற்றுநோய் காரணமாக வயிற்றிலும், ஏனைய உறுப்புகளிலும் அவருக்கு வலி மற்றும் கடும் நோவு, உடல் உளைவு உபா தைகள் எழுந்துள்ளன. இதைச் சமாளிப்ப தற்காக அவருக்குத் தொடர்ந்து "மோர் பின்' வலித் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த வியாழனன்று அவர் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு, சில பரிசோ தனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவ ரது வயிற்றுக்குள் ஊசி ஒன்று செலுத்தப் பட்டு, அதன் மூலம் அவரது ஈரலின் சில சிறிய துண்டங்கள் சோதனைக்காகப் "பிய்த்து' எடுக்கப்பட்டன. அந்தத் துண் டங்கள் மீதான புற்றுநோய்ச் சோதனை அறிக்கை மூலம் அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயின் வகையைக் கண்டறிய முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்தச் சோதனை அறிக்கை இரண்டொரு நாள்களில் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
நோய் உபாதை காரணமாகத் தனது லண் டன் வீட்டில் தொடர்ந்து ஓய்வில் இருக் கும் அன்ரன் பாலசிங்கம், வலித் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு நோவு தணியும் சம யங்களில் சரளமாக உரையாடுகின்றார்.

""தானமாகப் பெற்ற ஒரு சிறுநீரகத்தை யும் எனது மூளையையும் தவிர, ஏனைய உடற்பகுதிகளுக்கு புற்றுநோய் பரவி விட் டது போலும்'' என்று குறிப்பிட்டார் அவர்.
நோய் உபாதைகளுக்கு மத்தியிலும் மிகுந்த மனத்திடத்துடன் அவர் காணப் படுகின்றார். நோயின் எதிர் விளைவை எதிர்கொள்ளும் மனப்பக்குவத் தயார் நிலையில் தெளிவோடு அவர் இருக்கின்ற மையை அவரோடு உரையாடும்போது உணர முடிகின்றது.

தமது மோசமான உடல் நிலைமையை விடத் தனது தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய கருத்தே அவரது மனதில் ஆழப் பதிந்து, வெளிப்படுவதையும் உணர முடிந் தது.

புற்றுநோய் எல்லை மீறிப் பரவி யுள்ள நிலையில், அதற்கான சிகிச்சை ஏற்படுத் தக் கூடிய மோசமான நெருக்குதல்களைக் கருத்தில் கொண்டு, அந்த சிகிச்சையைத் தவிர்த்து, இயற்கையை எதிர்கொள்ள அவர் விரும்புகின்றார் போலும்.

இந்த நோய்க்கு அவர் தாக்குப் பிடித்து நிற்கக் கூடிய காலம் குறித்து சில உத்தேசத் தகவல்களை டாக்டர்கள், திருமதி அடேல் பாலசிங்கத்துக்குத் தெரியப்படுத்தியிருக் கிறார்கள் எனவும் அறியவருகின்றது.

மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையின் பின்னர், அந்தச் சிறுநீரகம் அவரின் உடலுடன் பொருந்திச் செயற்படுவதற்காகத் தொடர்ந்து வழங் கப்பட்ட உயர் வலிமையும், வீரியமும் மிக்க மருந்துகளே அவரின் உடலில் புற்று நோயை உடற்கலங்களின் அபரிதமான திடீர் வளர்ச்சியை தோற்றுவித்திருக் கலாம் என டாக்டர்கள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கின்றார்கள்.

உயிருக்காகப் போராடும் நிலையை நோக்கி இந்நோய் அவரைத் தள்ளியிருக் கின்றது என்பதே தற்போதைய நிலைமை யாகும்.

-உதயன்
posted by தமிழினி @ 11:58 PM   0 comments
'சிங்களக் ஹிட்லர்" ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலை அறப்போர்!
ஸ்ரீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 26ம் இந்தியாவிற்கு பயணம் செய்வதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினர் அன்றைய நாளில் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபடப்போவதாக அவ்வமைப்பின் பொதுச்செயலர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரு தொல்.திருமாவளவன் அவர்களால் இன்று (21.11.2006) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழத்தமிழர்கள் மீது சிங்களப் படையினர் நடத்தும் இனவெறித்தாக்குதலைத் தடுத்திடவும், யாழ் - கொழும்பு நெடுஞ்சாலையை நிலையாக திறந்துவிட ஆவன செய்யவும், இந்திய உணவுப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வழங்கச் செய்யவும் வலியுறுத்தி 20.11.2006 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 26.11.2006 அன்று இந்;தியாவிற்கு வரும் இராஜபக்சவின் வருகையை எதிர்த்தும் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகளின் உண்ணாநிலை அறப்போர் நடைபெறுகிறது.

-சங்கதி
posted by தமிழினி @ 1:21 AM   0 comments
Monday, November 20, 2006
கிளிநொச்சியில் இன்றும் மீண்டும் விமாகக்குண்டு வீச்சு
கிளிநொச்சியில் இன்று காலை சுமார்20 வரையிலான குண்டுக் வீசப்பட்டதாக "ரொய்ட்டர்" செய்தி வெளியிட்டுள்ளது.
"இது தொடர்பான செய்தி"
posted by தமிழினி @ 10:21 PM   0 comments
இணைத் தலைமைகளைச் சமாளிக்க
இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமை களின் மிக முக்கிய கூட்டம் நேற்று அமெரிக்காவின் வாஷிங் ரன் நகரில் நடைபெறவிருக்கையில் திடீரென முக்கிய அறி விப்பு ஒன்றை இலங்கை ஜனாதிபதியின் செயலகம் அதிரடி யாக விடுத்திருக்கிறது.பாதுகாப்புக் காரணம் என்ற சாட்டைக் கூறி கடந்த நூறு நாள்களுக்கு மேலாகத் தான் மூடி வைத்திருக்கும் ஏ9 பாதை ஊடான யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் போக்குவரத்தை ஒரேயொரு ஒரு தடவை திறந்து விடுவதற்குப் பெருமனது பண்ணி அனுமதி தரப்போவதான அரச அறிவிப்பே அது.

யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்த ஏற் பாடுகளின்படி ஏ9 பாதை ஊடான இந்தப் போக்குவரத்தைத் திறந்து விடுவது இலங்கை அரசத் தரப்பு எழுத்து மூலம் ஒப்புக் கொண்ட கடப்பாடாகும்.அந்தக் கடப்பாட்டைத் திடீரென நிறைவேற்ற நடை முறைப்படுத்த மறுத்து, யாழ். குடாநாட்டில் பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கியதன் மூலம், இலங்கைத் தமிழ் மக் களின் விசனத்துக்கும் சீற்றத்துக்கும் மட்டுமல்லாமல், சர்வ தேச சமூகத்தின் எரிச்சலுக்கும் இலங்கை அரசுத் தலைமை உள்ளாகியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் பேரில் கடந்த மாத இறுதியில் ஜெனிவாவில் இலங்கை அரசுத் தரப்புக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதிப் பேச்சு கள் முன் நகர்வேதுமின்றி பயனேதும் தராமல் முடிவுற்ற மைக்கும், இவ்வாறு யுத்தநிறுத்த ஒப்பந்தப்படியான தனது கடப்பாட்டை நிறைவு செய்யமறுத்து, ஏ9 பாதையை மூடி வைப்பதில் உறுதியாக இருந்த இலங்கையின் பிடிவாதப் போக்கே காரணமாக அமைந்தது.தனது இராணுவத் தந்திரோபாய நோக்கங்களுக்காக, இவ் வாறு மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் ஒரு நெருக்கடியை இலங்கை அரசுத்தரப்பு விடாப்பிடியாக உருவாக்கி நிற்கின் றமை, சர்வதேச அதிருப்திக்கும் எரிச்சலுக்கும் உள்ளாகியிருக் கின்றது.

இந்நிலையில்தான் கடந்த மாத இறுதியில் பயனேதுமின்றி முடிவடைந்த "ஜெனிவா 2' பேச்சுகள் குறித்தும் அதன் தொடராக எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன நேற்று வாஷிங்ரனில் கூடவிருந்தன.இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கையில் இலங்கையின் வடக்கில் நிலவும் மிகமிக அசாதாரணமான மோசமான நெருக் கடியான நிலைமையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி, இணைத் தலைமைகளின் அவசரத் தலையீட்டைக்கோரி, இறுதி நேர விண்ணப்பம் ஒன்றை யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் அடிகள் இணைத்தலைமைகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

""யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத் தும் வகையிலும் யாழ். மக்களைத் திறந்த வெளிச் சிறையில் அடைப்பதினின்றும் விடுவிற்பதற்காகவும் வடக்கில் பட்டி னிச் சாவு மற்றும் போஷாக்கின்மை போன்ற மனிதப் பேரவ லங்களைத் தவிர்ப்பதற்காகவும் குடாநாட்டு மக்களுக்கு நேர்ந்துள்ள மிகக் கொடூரமான நெருக்கடியிலிருந்து அவர் களை மீட்பதற்காகவும் ஏ9 பாதையைத் திறக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு இணைத் தலைமைகள் அழுத்தம் கொடுப்பது அத்தியாவசியமானது'' இவ்வாறு யாழ். மக்களின் சார்பில் பகிரங்க வேண்டு கோளை இணைத் தலைமைகளுக்கு முன்வைத்திருக்கிறார் யாழ். ஆயர்.இராணுவத் தந்திரோபாய நோக்கங்களுக்காக ஏ9 பாதை யைத் தான் மூடி வைத்திருப்பதும், அதனால் எழுந்துள்ள மனி தப் பேரவலமும், இவ்விடயத்தில் தான் வெளிப்படுத்தும் பிடி வாதமும் சர்வதேச மட்டத்தில் தனக்கு எதிராக மிகவும் மோசமான கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி வருவதை உணர்ந்துகொண்ட இலங்கை அரசு, அதைச் சமாளிப்பதற்காக இப்போது "அந்தர் பல்டி' அடித்திருக்கிறது.நேற்றுக் கூடவிருந்த இணைத்தலைமைகளின் கூட்டத்தின் முடிவில், இவ்விடயத்தில் தனது பிடிவாதப் போக்கு மிக மோசமாகவும், காட்டமாகவும் விமர்சிக்கப்படும் என்பதை உணர்ந்துகொண்ட இலங்கை அரசு, அதைத் தவிர்க்கச் செய்யும் இறுதி நேர எத்தனமாக சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டது.

அதன்படி""சமயத் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் விடுத்த வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் வாரங்களில் வடக்கிற்குக் கப்பலில் பொருள்களைக் கொண்டு செல்வதைப் பாதிக்கும் வகையான சீரற்ற காலநிலை நிலவும் என்பதாலும் முகமாலை ஊடாக ஏ9 பாதையில் ஒரே தடவையில் பொருள்களை வடக்கே கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.'' என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏ9 பாதையை யுத்த நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு முர ணாக மூடி, வடக்கில் பெரும் மோசமான மனிதப் பேரவலத்தை ஏற்படுத்திய தனது கொடூரப் போக்குக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு திரண்டு வந்துள்ள நிலையில் இது விடயத்தில் உலகின் சீற்றம், இணைத்தலைமை நாடுகளின் கூட்ட முடிவில் கூட்டறிக்கையாக வெளிவர இருக்கையில் அதைச் சமாளித்துத் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி நேரத் தந்திரமாக இவ்வாறு ஏ9 பாதையை ஒரு தடவை மட்டும் திறக்கும் "தாராளப் போக்குக்கு' இறங்கி வந்திருக்கின்றது இலங்கை அரசு.

ஆனாலும், இவ்விடயத்தில் காதில் பூச்சுற்றுவது போன்ற இலங்கையின் இந்தத் தந்திரோபாயக் காய் நகர்த்தல் இறுதிநேர எத்தனம் இது போன்ற பல விடயங்களையும் கையாண்டு தேர்ந்த இணைத்தலைமை நாடுகளிடம் பலிக்கும் என நம்புவதற்கு இடமில்லை.

இன்று இப்பத்தியை வாசிக்கும் இச்சமயத்தில் இவ்விடயம் பற்றிய இணைத்தலைமை நாடுகளின் நிலைப்பாடு கூட்டறிக்கை வடிவத்தில் வெளியாகி, உண்மையை வெளிப்படுத்தி நிற்கும் என எதிர்பார்க்கலாம்.அது மட்டுமல்ல வாகரையில் தமிழர்கள் அனுபவிக்கும் நெருக்கடிகள், தமிழர் தாயகமான வடக்குகிழக்கைப் பிரிப்பதற்குத் தென்னிலங்கை மேற்கொண்டுள்ள தந்திரங்கள், கொழும்பு அரசின் இராணுவ முனைப்புப் போக்கு, சிறுவர்களைப் பலவந்தமாகப் படைதிரட்டும் அரச இராணுவ மற்றும் கருணா குழுவின் கூட்டுச் சதி நடவடிக்கைகள் போன்றவை குறித்தெல்லாம் தமது கருத்துகளை இணைத்தலைமைகள் வெளிப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கலாம்.
posted by தமிழினி @ 8:09 PM   0 comments
Sunday, November 19, 2006
யாழ். மக்கள் கொடுக்கும் விலையை விரைவில் தென்னிலங்கை மக்களும் கொடுக்க வேண்டியதிருக்கும்:
அத்தியாவசியப் பொருட்களுக்காக யாழ். குடாநாட்டு மக்கள் கொடுக்கின்ற விலையை விரைவில் தெற்கு மக்களும் கொடுக்கவேண்டிய நிலையேற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 51 ஆவது ஆண்டு மாநாட்டில் அவர் ஆற்றிய உரை:
கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதன் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியை ஒருபோதும் அழித்துவிட முடியாது. அமரர் டி.எஸ்.சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி கடந்த காலங்களில் எனது தலைமையின் கீழ் பாதுகாக்கப்பட்டது போல எதிர்காலங்களிலும் பாதுகாப்பேன்.

கட்சியில் நிலவுகின்ற முரண்பாடுகளை மறந்து பேச்சுவார்த்தை நடத்தி சகலரையும் ஐக்கியப்படுத்தும் அதேவேளை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் சுமூகமாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதுடன் அவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தி விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப்பீடமேறும்.

கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகளை ஏற்படுத்தி கட்சியை அழிப்பதற்கு எவராலும் முடியாது. முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்திற்காகவும் ஐக்கியத்திற்காகவும் செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் ஒன்றில் தோல்வியடைந்தபோது ஐக்கிய தேசியக் கட்சியின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டுவிட்டதாக பண்டாரநாயக்க கூறினார்.

ஆனால் அந்த ஆணி அடிக்கப்பட்டதன் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அதேபோன்று எமது கட்சியை எவராலும் அழிக்க முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் கூறியதுபோன்று யாழ். குடாநாட்டு மக்கள் பட்டினி சாவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். தெற்கில் எங்கு, எப்போது குண்டு வெடிக்கும் என்ற பயத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களுக்காக யாழ். குடாநாட்டு மக்கள் கொடுக்கின்ற விலையை விரைவில் தெற்கு மக்களும் கொடுக்க வேண்டிய நிலையேற்படும்.

நான் பிரதமராக இருந்தபோது நிதி தொடர்பான நிர்வாகத்தை நாடாளுமன்ற அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தேன். ஆனால் 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் அந்த அதிகாரம் யாரிடம் இருக்கின்றது? என்று நாடாளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ தெரியாது. இந்நிலைமை தொடர்ந்தால் மக்கள் தற்போது செலுத்துகின்ற கடன் தொகை மேலும் அதிகரிக்கும்.

ஐ.தே.க. தேர்தலில் தோல்வியடைந்த போதெல்லாம் கட்சி இல்லாமல் போய்விடும் என்று கூறினார்கள். கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது, இல்லாமல் போகவில்லை. ஆனால் நாடு இல்லாமல் சென்றது.
கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் சில யோசனைகள் இருக்கின்றன. அந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டபின்னர் அது தொடர்பாக பேச்சு நடத்தி ஐ.தே.க.வினை மீண்டும் பெரும்பான்மை கட்சியாக மாற்றி ஐ.தே.க. யுகத்தையேற்படுத்தி ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்றார் ரணில்.
posted by தமிழினி @ 8:25 PM   0 comments
ஏ-9 பாதை திறப்பதற்கு சிறிலங்கா ஐனாதிபதி உத்தரவு
அமெரிக்கா வோஸிங்ரன் நகரில் இணைத்தலைமை நாடுகளுடனான மாநாட்டில் மகிந்த ராஐபக்ஸ அரசாங்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஞாயிறு இரவு சிறிலங்கா அரசாங்கத்தால் ஏ-9 பாதை திறப்பதற்கான உத்தரவு சிறிலங்கா ஐனாதிபதி செயலகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதை திறக்கும் திகதி குறித்து இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை முதல்கட்டமாக ஒருதொகுதி பாரவூர்திகள் ஏ-9 பாதையூடாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுடன் செல்லவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் ஓகஸ்ட் 11 திகதி முதல் ஏ-9 பாதை மூடப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே.
posted by தமிழினி @ 8:20 PM   0 comments
முன்னாள் தழிழக முதல்வர் மத்திய அரசுக்கு அவசரக் கடிதம்
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதாக அறிவித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் மத்திய அரசுக்கு அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அக்கடிதத்தில்,

இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்களை நேரடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப வேண்டும் எனவும், தற்போதைய சூழ்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்படும் இந்த உதவிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் என்பது கேள்விக்குறியாக உள்ளதால், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக இந்த உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

இதேவேளை இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அனுமதி வழங்கப்படாமை கண்டனத்திற்குரியது எனவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலனுக்காக செய்யக்கூடிய போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஒரு முக்கிய ஜனநாயகக் கடமையாகும்.

இவ்வாறான போராட்டங்களுக்கு தமது ஆட்சிக் காலத்தில் முறையாக அனுமதி வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் இன்றைய திராவிட முன்னேற்ற கழக அரசு தற்போது அனுமதி வழங்க மறுப்பது மக்கள் விரோதச் செயலாகும் எனவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

-சங்கதி
posted by தமிழினி @ 7:48 PM   1 comments
Friday, November 17, 2006
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு பாதுகாப்பு செலவினம் 139 பில்லியன் ரூபா
மஹிந்த சிந்தனை அடிப்படையில் பத்தாண்டு தூரநோக்குடன் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்தின் பிரகாரம் அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்பு செலவினம் 139.66 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 31 பில்லிய அதிகரிப்பாகும்.

பாதுகாப்பு மற்றும் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கான செலவீனமாகவே மேற்படி தொகை மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த ஆண்டுக்கான துண்டுவிழும் தொகை 235,038 மில்லியனாகும். இது கடந்த ஆண்டைவிட 16,853 மில்லியன் அதிகரிப்பாகும். அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் 599,817 மில்லியனாகும்.

மொத்த செலவீனம் 834,855 மில்லியனாகும். இதேவேளை அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
posted by தமிழினி @ 12:05 AM   0 comments
Thursday, November 16, 2006
சிறுவர்களை பலவந்தமாக துணைப்படையில் இணைக்கும் அரச படையினரை உடன் கைது செய்ய வேண்டு-நியுயோக் மனித உரிமை அமைப்பு
நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைக்கான அமைப்பு பலவந்தமாக சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான பிரதிநிதி அலன் ரொக் சிறுவர் பலவந்தமாக கருணாகுழுவின் உதவிஉடன் ஸ்ரீலங்கா இராணுவம் படையில் சிறுவர்களை இணைக்கிறது. என குற்றம் சாட்டியுள்ளாதை நியூயேர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமை அமைப்பு இவ்வறிக்கையை இன்று வியாழன் வெளியிட்டுள்ளது..

இவ்வமைப்பானது கடந்த வருடம் விடுதலைபுலிகளால் படையில் இணைக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான கணிப்[பொன்றை நடத்தி அடுதமாதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது..

கருணா குழுவின் உடனடியாக இவ்வாறான கடத்தல் களை கைவிட்டு செய்தவர்கள் விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பின் குழு பணிப்பாளர் ஜோ.பெர்க் தெரிவித்தாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. .
posted by தமிழினி @ 8:34 PM   0 comments
படையினர்மீததான தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் - எல்லாளன் படை எச்சரிக்கை
யாழ்குடாநாட்டில் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல்கள் இனிவரும் காலங்களில் அதிகரிக்கப்படும் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நேற்று வியாழக்கிழமை குருநகர், நாவாந்துறை, அராலி உட்பட யாழ்குடாநாட்டில் பல்வேறு இடங்களில் எல்லாளன் படையினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அச் சுவரொட்டியில் பொதுமக்கள் மீதானபடுகொலைகள், கொலைவெறிதாக்குதல்கள் மற்றும் ஆள்கடத்தல்கள் என்பன உடன்நிறுத்தப்படாவிட்டால் இனிவரும் காலங்களில் சிறிலங்காபடையினர் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என அச்சுவரொட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-பதிவு
posted by தமிழினி @ 8:19 PM   0 comments
பேசாலைக் கடலில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்! மடு மாதா தேவாலயப்பகுதி நோக்கி படையினர் எறிகணை வீச்சு
இன்று மாலை 6.30 முதல் மன்னார் பேசாலைக் கடலில் கடும் வெடிப்பச் சத்தங்கள் நள்ளிரவைத் தாண்டியும் கேட்டவணணம் இருப்பதால் பேசாலை மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு தேவாலயங்களுள் தஞ்கம் புகுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மடு மாதா தேவாலயப் பகுதிகளும் படையினரின் ஏவும் ஷெல்கள் விழுந்தவண்ணம் இருப்பதுடன் குடிமனைகளிலும் ஷெல்கள் விழுந்தவண்ணம் உள்ளதனால் அப்பிரதேச மக்களும் தமது உயிரைப்பாதுகாக்க அங்கிருந்து இடம் பெயர்வதாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-சங்கதி
posted by தமிழினி @ 7:56 PM   0 comments
யாழில் முதல் பட்டினிச் சாவு
யாழ். குடாநாட்டில் ஒருவர் பட்டினியால் இறந்தது இதுவே முதல் தடவை என்று மரண விசாரணை நடத்தி இறப்புச் சான்றிதழ் வழங்கிய பருத்தித்துறை பதில் நீதவான் நடராஜா தங்கராஜா அறிவித்திருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை யாழ். வடமராட்சியைச் சேர்ந்த 50 வயதான முத்தையா சந்திரபாலா என்பவர் பருத்தித்துறைக்கு அருகே பட்டினியால் மரணமடைந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினியால் மரணமடைந்தவர் ஒரு குடும்ப ஆதரவற்றவர் என்றும் வதிவிடம் அற்றவர் என்றும் உதிரித் தொழில்களை செய்து வந்தவரென்றும் தெரிவித்த மரண விசாரணை நீதவான் இந்த மரணத்தை உணவுப் பற்றாக்குறையுடன் இணைப்பதை தவிர்க்கும்படியும் கேட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை சிறிலங்கா இராணுவம் மூடிவிட்டதால் யாழ். குடாநாட்டு உணவுப்பற்றாக்குறைக்கும் பட்டினிச் சாவுக்கும் உள்ளாகும் என சர்வதேச உதவி நிறுவனங்களும் மனிதாபிமான பணியாளர்களும் எச்சரித்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதனை ஓர் அபாய அறிவிப்பு என்றே செய்தி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

-புதினம்
posted by தமிழினி @ 7:21 PM   0 comments
பலப்பிட்டி நீதிமன்றத்தை வீடியோ படமெடுத்த முஸ்லிம் இளைஞன் பொலிஸாரால் கைது

பலப்பிட்டி நீதிமன்றத்தை வீடியோ மூலம் படமெடுத்த இளைஞர் ஒருவரை பொலிஸார் நேற்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.கண்டி கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்தவரெனக் கூறப்படும் 28 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேக நபரிடமிருந்து வீடியோ கமரா ஒன்றும் கையடக்கத் தொலைபேசியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கையடக்கத் தொலைபேசி கமராவில் நீதிமன்றம் முழுவதும் படமாக பதியப்பட்டுள்ளதென அம்பலாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் ஆரியரத்ன தெரிவித்தார்.

நேற்றுக் காலை 9 மணியளவில் இந்த நபர் தனது கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை படமெடுத்தபோது நீதிமன்ற ஊழியர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் அதன் பின்னர் சற்று நேரம் தாமதமாகிய நிலையில் நவீன ரக சிறிய வீடியோ கமரா மூலம் மீண்டும் நீதிமன்றத் தொகுதியை படமெடுத்த போது பொலிஸார் அவரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனமொன்றை எடுத்துச் செல்ல உறவினர் ஒருவருடன் வந்ததாகக் குறிப்பிட்டுள்ள இச் சந்தேகநபர் முரண்பாடான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் சந்தேக நபரை விசாரித்து வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
posted by தமிழினி @ 1:02 AM   0 comments
வெடிகுண்டுப் பொருட்கள் கடத்திய சிங்கள இளைஞர்கள் புலிகளா?
[16 - November - 2006]

தியத்தலாவ பிரதேசத்தில் பெருந்தொகை வெடிகுண்டுப் பொருட்களுடன் இரண்டு சிங்கள இளைஞர்களை தியத்தலாவ பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 12 ஆம் திகதி கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களும் வெடி பொருட்கள் அடங்கிய பொதிகளை சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு தியத்தலாவை பிரதேசத்தில் மீகஸ்வத்த சந்தியிலுள்ள வீதித்தடை நிலையத்தை நோக்கி இரவு வேளையில் வந்த சந்தர்ப்பத்திலேயே வீதித்தடை நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் ஏற்றிவந்த பொதிகளிலிருந்து வெடி மருந்துப் பொருட்களையும் மற்றும் ஜெலிக்நைற் வெடிகுண்டுக் குச்சிகளையும் சோதனையின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்தே மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளிலிருந்து அந்த இரண்டு இளைஞர்களும் மகாஓயா பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், குறித்த வெடிகுண்டுப் பொருட்களை அவர்கள் எங்கே பெற்றுக்கொண்டார்கள் என்பது பற்றி அவர்களிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அவர்கள் பதில்கூற மறுத்துவிட்டதாகவும் தியத்தலாவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார். இவர்கள் ஏற்றிவந்த பொதிகளில் 4 கிலோகிராம் நிறைகொண்ட வெடிகுண்டு தயாரிப்புக்கான வெடிமருந்துப் பொருட்கள் மற்றும் குண்டு வெடிப்புக்கான ஜெலிக்நைற் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லோரன்ஸ் ரணதுங்கவின் அறிவுறுத்தலின் கீழ் ஜயதிஸ்ஸ, நௌபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
posted by தமிழினி @ 12:58 AM   0 comments
யாழ். நகரில் ஒரு கிலோ மீனின் விலை ஆயிரம் ரூபா
யாழ். நகரில் மீன் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ விளைமீன் ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

யாழ். நகரின் பாஷையூர், குருநகர் மற்றும் நாவாந்துறை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று மாதங்களாக மேற்படி பிரதேசங்களில் கரையில் இருந்து சில குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

இதனால் இப்பிரதேசத்தில் மீன்களை பிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய நிலை குறித்து மீனவர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. படையினர் மீன் பிடிக்கத் தடை செய்திருப்பதனால் நாம் விரக்தியடைந்துள்ளோம் என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
posted by தமிழினி @ 12:30 AM   0 comments
Wednesday, November 15, 2006
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்:

இன்று காலை07.30 மணியளவில் வவுனியா மன்னார் வீதி பம்பைமடு 10வது 11வது மைல்க் கல் பகுதியில் இலங்கை காவல்த் துறையினரை இலக்கு வைத்து இரு கிளைமோர்கள் வெடிக்க வைக்கப்பட்டதாக இலங்கை அரசதரப்பு செய்தி வெளியிட்டிருக்கிறது.
posted by தமிழினி @ 10:54 PM   0 comments
சக்தி ரி.வியின் "மின்னல்' தொகுப்பாளர்ஸ்ரீரங்காவுக்கு கொலை அச்சுறுத்தலாம் கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தகவல்

சக்தி ரி.வியின் பணிப்பாளரும், "மின்னல்', "எரிமலை' நிகழ்ச்சிகளின் தொகுப்பாளருமாகிய ஜே.ஸ்ரீரங்காவுக்கு கொலை அச்சுறுதத்தல் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார் என்று "சக்தி' ரி.வி. மற்றும் வானொலி ஆகியன நேற்று செய்தி வெளியிட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களின் செவ்விகளை மும்மொழிகளிலும் பெற்று தொகுத்து வழங்கும் "மின்னல்' மற்றும் "எரிமலை' நிகழ்ச்சி கள் ஊடாக பிரபலம் பெற்றிருப்பவர் ஸ்ரீரங்கா.சக்தி ரி.வியில் நீண்டகாலமாக வாராந்தம் ஒளிபரப்பாகிவரும் "மின்னல்' நிகழ்ச் சியின் 250ஆவது வார நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

-உதயன்
posted by தமிழினி @ 9:35 PM   0 comments
ரவிராஜ் படுகொலைக்கு சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களின் படுகொலைக்கு எதிராக சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றொஜர் நோட்டமன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நடராஜா ரவிராஜ் அவர்கள் கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழழை கொழும்பில் படுகோலை செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இதுபோhன்ற அரசியல் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இது போன்ற படுகொலைகள் நிறுத்தப்படாதவிடத்து, இலங்கைத் தீவில் வாழும் பல இன மக்களிடையே சமரசப் பேச்சுக்களோ அல்லது தீர்வுகளோ ஒரு போதும் ஏற்பட மாட்டாது.

இலங்கையில் உள்ள அனைத்து ஆயுதம் தாங்கிய தரப்பினரும், ஒட்டுக் குழுக்களும் தமது வன்முறைகளைக் கைவிடவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்த் தன்மையைத் தவிர்த்து, ஒரு சாமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி, அனைத்து இன மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து அமைதியாக வாழக்கூடிய சமஷ்டி அமைப்பு முறையைக் கைக்கொள்ளவேண்டும்.

அத்தோடு இத்தீவில் வாழும் ஒவ்வொரு பிரஜையின் அடிப்படை மனித உரிமையும் மதிக்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பதிவு
posted by தமிழினி @ 9:09 PM   0 comments
ஜெனிவா பாராளுமன்றில் ரவிராஜின் படுகொலையை கண்டித்து இரு நிமிட அகவணக்கம்.

மாமனிதர் ரவிராஜின் படுகொலையை கண்டித்து சுவிற்ஸர்லாந்து நாடாளுமன்றில் சமவுடமைவாதக் கட்சியின் ஏற்பாட்டில், இரு நிமிட அகவணக்கமும், கவனயீர்ப்பு ததீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நிகழ்த்தும் தமிழின அழிப்புப் படுகொலைகளை கண்டித்து, மக்கள் கட்சியின் ஏற்பாட்டில், சுவிற்ஸர்லாந்து நாடாளுமன்றத்தின் மேற்சபையில் உள்ளக விவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

மாமனிதரின் படுகொலையை கண்டித்து, அறிக்கை வெளியீட்டிருக்கும் சுவிற்ஸர்லாந்து சமவுடமைத்துவக் கட்சியின் நாடடாளுமன்ற ஊறுப்பினர் றொஐர் நோட்மான், அரசியல் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பேச்சுவார்த்தைகளின் மூலம் சகல மக்களுளும் சுமுகமாகவும், அடிப்படை மனித உரிமையுடனும் வாழக்கூடிய தீர்வை ஏற்படுத்துமாறு, அனைத்து தரப்பினரிடமும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

-பதிவு
posted by தமிழினி @ 9:06 PM   0 comments
சிறிலங்கா அரசுக்கு பரிய அழுத்தம் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி

தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஈடுபட முடியாதபடியான பாரிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.

ஜெனீவாவில் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நேற்று புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்பாட்டப் பேரணியைத் தொடர்ந்து, தமிழர் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதியை சந்தித்தபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியியின் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது.

தமிழர் பேரவையின் சார்பாக சோதிநாதன், தம்பிப்பிள்ளை நமசிவாயம், காசிலிங்கம் இராமகிருஸ்ணன், தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக சுபாஸ்கரன் மற்றும் தமிழ்ப் பெண்கள் அமைப்பு சார்பாக நிர்மலா பரராஜசிங்கம் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைமைப் பிரதிநிதியைச் சந்தித்து மனுவைக் கையளித்தனர்.

தமிழர் பிரதிநிதிகளுடன் சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றப் பிரதிநிதி தேரி பேக்கெட், தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்தும்படியான அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று உறுதி அளித்தார்.

இது பற்றி அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இரண்டு தரப்பினரது நியாங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் உள்வாங்கியிருப்பதாகவும், தமிழ் மக்களுக்கு இடையூறு இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கான அழுத்தத்தை சிறிலங்கா அரசிற்கு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அடுத்த மாதம் டிசம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னதாக அந்த அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் வழங்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

-புதினம்.
posted by தமிழினி @ 7:40 PM   0 comments
இந்திய சண்ட்காரில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் பயிற்சி

தற்சமயம் ஸ்ரீலங்கா விமானப்படை வீரர்கள் சண்டிகாரிலுள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் பயிற்சி பெறுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
நாங்கள் இங்கே 6 பேர் M.G-275 இயங்குவது தொடர்பான கற்கை நெறியை மேற்கொள்வதாக சார்ஜெனட் பெரெரா தெரிவித்தார். இப் பயிற்சி 2007 ஜனவரி 5ம் திகதி நிறைவடையவுள்ளது..தற்போது பயிற்சி பெறுபவர்கள் இலங்கையிலிருந்து வந்த 3வது குழுவாகும்..என சார்ஜெனட் சிறிகுணசிங்க தெரிவித்துள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா மேலும் தெரிவித்தது. .
posted by தமிழினி @ 1:22 AM   0 comments
Tuesday, November 14, 2006
உணவு இல்லை, கல்வி இல்லை, உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.
யாழ் குடாநாட்டில் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் பொது மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வியலுக்கு வேண்டிய எந்த வகையான வசதிகளும் இல்லையென்பதே உண்மையாகும். குறிப்பாக பொது மக்களின் வாழ்வுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் இல்லை உயிருக்கும் இன்று உத்தரவாதம் இல்லை. இதே போன்று மாணவர்களைப் பொறுத்த வரையில் கல்வியும் இல்லை அவர்களின் உயிர்களுக்கும் கூட உத்தரவாதம் இல்லையென்ற நிலமையே இன்று யாழ் குடாநாட்டில் காணப்படுகின்றது.

இவ்வாறு யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பி;டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்…
சமாதானத்திற்கான பாதையென்று தெரிவித்தே நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏ9 வீதி திறக்கப்பட்டது. அந்தப் பாதையை மீண்டும் மீளத் திறப்பதன் மூலமே குடாநாட்டு மக்களின் இன்றைய அவலம் மட்டும் மன்றி இலங்கைக்கான அமைதி வழியும் திறக்கப்பட முடியும்.

முன்னர் எப் பொழுதும் கண்டிராத அவலத்தில் யாழ் குடாநாட்டு மக்களின் இருப்பு உள்ளது மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் தற்போதைய நிலமை திருந்துவதாக இல்லை. அன்றாட உணவுத் தேவைக்காக அலைவதும் அவற்றுக்காக நீண்ட வரிசையில் நாள் முழுவதும் தவம் கிடப்பதும் இங்கு வாழ்வாகியுள்ளது. மனிதரைத்தவிர அனைத்துப் பொருட்களின் பெறுமதியும் அதிகரித்துள்ளது.

ஏறக்குறைய ஆறு இலட்சத்திற்கு அதிகமான மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை ஆகாயக் கப்பலிலும், கடல் வழிக் கப்பலிலும், கொண்டு வந்து தீர்ப்போம் என்னும் அறிவுபூர்வமற்ற அனுகு முறையில் இங்குள்ள மக்கள் தெரிவு ஏதுமற்ற அடிமைகளாக்கப்பட்டுள்ளார்கள.; பொருள்கள் மிகக் குறைவாக உள்ள நிலையில் வருகின்ற சிறிதளவு பொருட்களும் கறுப்புச் சந்தையால் விழுங்கப்படும் என்ற சிறிய பொருளாதார உண்மையைக் கூட விளங்காத செயற்பாடுகளே காணப்படுகின்றது.

உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதமற்று அனைவரையும் உலுப்பியுள்ள இந்த அவலத்தில் கடற் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் நாளாந்த உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் நலிந்த மக்கள் எனப் பலரது உயிர் வாழ்வுமே இன்று கேள்விக் குறியாகியுள்ளது குழந்தைகளுக்கான பால்மாவுக்கே வழியில்லையென்றால் ஏனையவர்களின் வாழக்கையைப் பற்றிப் பேசவே தேவையில்லை.

பசி பட்டினி பிச்சையெடுத்தல் என்பன மேலும் அதிகாரிக்கும் ஆபத்து தோன்றியுள்ளது. இவற்றுக்கு மேலாக போக்குவரத்து எரி பொருள் மின்சாரம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் பெரும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது மனிதர்களின் உயிர் பாதுகாப்புப் பற்றிய அச்சம் என்றும் இல்லாத வாறு அதிகரித்துள்ளது.

மக்களின் பண்பாட்டு வாழ்வின் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. தொடர்பாடல் வசதிகள் மறுக்கப்பட்டு உறவுகள் துண்டாடப்பட்டு மக்கள் பெரும் உள நெருக்கீடுகளுக்குள் பெருமளவு மக்களின் மனங்கள் உடைந்து போயுள்ளன. யாழ்ப்பாண மாவட்டதிற்குள் மக்களின் செயல்பாடுகள் ஆயுத முனையில் முடக்கப்பட்டுளள்மையால் எல்லா செயற்பாடுகளும் முடங்கிப் போயுள்ளன. இவற்றைத் தட்டிக் கேட்கின்ற சிவில் சமூகத்தின் குரல்களும் ஆயுத முனையில் நசுக்கப்பட:டுள்ளன. அத்துடன் அவர்களின் குரல்களும் கருத்தில் எடுக்கப்படுவதில்லை.

இது நாள் வரை பிச்சை புகினும் கற்றல் நன்றே எனத் தமிழர் சமூகம் கொண்ட உணர்வும் தனி விழுமியமும் கூட இன்றைய ஒடுக்கப்பட்ட வெளியில் கேள்விக் குறியாகியுள்ள பேரவலம் காணப்படுகின்றது. சுதந்திரமாக பாடசாலைக் கல்வியை பிள்ளைகள் மேற்கொள்ள முடியாதபடி தென்மராட்சியிலும் வலி வடக்கில் உள்ள எல்லைக் கிராமங்களிலும் பாடசாலைகள் இடம் பெயர்ந்தும் மாணவர்கள் இடம் பெயர்ந்தும் பாடசாலைகள் தரை மட்டமாக்கப்பட்டும் காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் அலைந்து திரியும் நிலைமை காணப்படுகின்றது
இரவு முழுவதும் வெடித்துச் சிதறும் செல் சத்தங்களுக்குள்ளும் காணாமல் போதல் ஆள் கடத்தல்கள் இரானுவப் புலனாய்வாளர்களின் கொலைகள் என்பவற்றினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்குள்ளும்; பிள்ளைகளின் கல்வியும் நித்திரையும் விழுங்கப்படுகின்றன.

கடந்த காலத்தில் இடம் பெற்ற பல்வேறு இடரான நிலைகளிலும் இடையூறு இன்றி தொடர்ந்த எங்கள் பல் கலைக்கழக மாணவர்களின் கல்வி இன்று மறாக தடைப்பட்டுப் போயுள்ளது. ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்கு இன்றியமையாது உள்ள அடிப்படையான உயர் கல்விக்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலமையை மேலும் தொடர விடமுடியாது.

அச்சமும் அவலமும் சூழ சிதறிப் போன யாழ் பல் கலைக்கழக மாணவர் சமூகம் மீண்டும் கல்விச் செயற்பாடுகளுக்காக ஒன்று கூடுவதற்கான வழிவகைகளை விரைந்து காண்பது அவசியமாகும். மனித உரிமை கல்விச் சுதந்திரம் வாழ்வதற்கான உரிமை என்று உயர் தரு விழுமியங்களை ஆராதிக்கும் உலக நாடுகளின் மனச் சாட்சி இன்றைய யாழ்ப்பாண மக்களின் அவலம் பற்றி உரத்து உறுதியுடன் பேச வேண்டும் இலங்கை அரசும் அதன் படைத் தரப்பான இயந்திரங்கள் உட்பட அனைத்தும் இந்த மனித அவலத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

போதிய உணவில்லை உரிய நேரத்திற்கு கல்வியில்லை ஆடிப்பாட வாய்ப்பில்லை போன்ற நிலமைகள் ஆரோக்கியமற்ற சந்ததியை எதிர்காலத்தில் உருவாக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சமாதானத்திற்கான பாதையென திறக்கப்பட்ட ஏ9 பாதையை மீளத் திறப்பதன் மூலம் குடாநாட்டு மக்களின் இன்றைய அவலத்தை மடடுமன்றி எதிர் கால இலங்கைக்கான வழியும் திறக்கும் என்ற உண்மையையும் இனியும் தாமதிக்காது அனைத்துதத் தரப்பினரும் உணர்ந்து செயற்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
posted by தமிழினி @ 10:45 PM   0 comments
விடுதலைப் போரின் அடுத்த கட்டம் ஆரம்பமாகப் போகிறது.
இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன்கேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார்.

சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அதுதான் ரம்புக்வெலவின் குத்துக்க ரணத்திற்குக் காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரி விற்கும் முயற்சி. அதாவது மாவிலாறு, சம்பூர் ஆக்கிரமிப்புக்கள் இராணுவத்திற்கு மிகப்பெரும் பலத்தை கொடுத்து விட்டது போன்றும், புலிகள் பெரும் அழிவை சந்தித்து விட்டார்கள் போன்றதுமான கற்பனை.

பொதுவாக உலகில் போரில் வென்ற நாடுகள் அல்லது பலத்தில் மேலோங்கிய நாடுகள் தான் பலவீனமான நாடுகள் மீது நிபந்தனைகளை விதிப்பதுண்டு. சிங்கள அரசின் கற்பனையும் அது தான். அது மட்டுமல்லாது தான் தோன்றி த்தனமான விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்கள் மீதான படுகொலைகள் என அரச பயங்கரவாதமும் கட்டுக்கடங்க வில்லை.

புலிகள் இது தொடர்பாக பல தடவைகள் சர்வதேச த்திற்கும், நோர்வேக்கும், கண்காணிப்புக்குழுவிற்கும் கூறிவிட் டார்கள். ஆனால் எதுவுமே போர் வெறிகொண்ட அரசின் காதில் ஏறியதாக இல்லை. அரசு தனது அரசியல் தோல்விக ளை மறைக்க தமிழ் மக்களின் மீதான இன அழிப்புப் போரை முனைப்பாக்க முயன்றது. அதற்காக எதிர்வரும் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவை 139.5 பில்லியன் ரூபாய்களாக உயர்த்தியதுடன், கனரக ஆயுதங்களும் வாங்கிக்குவிக்கப்படுகின்றன.

படையினரதும், சிங்கள மக்களினதும் மனவலுவை அதிகரிக்கும் முயற்சியில் ஜனாதிபதி முதல் அடிமட்ட சிங்கள அதிகாரிகள் வரை ஈடுபட்டுள்ளார்கள். அதன் ஓரங்கமே ஐப்பசி 10 ஆம்நாள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கிபீர் விமானத்திலும் ஏறி சிங்கள மக்களுக்கு வலுவூட்டியுள்ளார். அண்மைக்காலமாக விமானப்படை விமானங்கள் நடாத்தும் தாக்குதல்களால் தான் புலிகள் பெரும் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பது சிங்கள அரசின் கணக்கு. எனவே தான் 20 வருடங்களின் பின் ஜனாதிபதி ஒருவர் விமானப்படைத்தளத்திற்கு விஜயம் செய்ததுடன் போர்விமானத்திலும் ஏறிவிளையாடியுள்ளார்.

இந்த வீர விளையாட்டுக்களின் தொடர்ச்சியாக பெரும் தாக்குதல்ளை நிகழ்த்தி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சில பிரதேசங்களை கைப்பற்றிவிட்டு ஜெனீவா விற்குச் செல்வது அல்லது இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளுக்கு ஆத்திரமூட்டி பேச்சுக்களில் இருந்து அவர்களை விலகவைப்பது தான் அரசின் தந்திரம். அதற்காக அரசு கிழ க்கில் ஒன்று, வடக்கில் ஒன்றாக இரு களமுனைகளை தெரிவு செய்தது. கிழக்கில் வாகரையை ஆக்கிரமிக்கும் முயற்சியாகப் பனிச்சங்கேணியை கைப்பற்றுதல், வடக்கில் ஆனையிறவை கைப்பற்றுவதற்கு ஏதுவான முதற்படியாக பளையை கைப்பற்றுதல்.

பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு, ஒட்டுக்குழு உறுப்பினர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. கடுமையான ஆட்டிலறி, பல்குழல் எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்களுடன் இராணுவ மேஜர் தலைமையில் 400 இராணுவ த்தினரும், 75 ஒட்டுக் குழு உறுப்பினர்களும் மாங்கேணி படைமுகாமில் இருந்து நகர்வை ஆரம்பித்தனர். இவர்களுக்கு உதவியாக கடற்படையும் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் தான் பெருமளவான ஒட்டுக் குழு உறுப்பின ர்களை முதல் முறையாக இராணுவம் பயன்படுத்தி உள்ளது. இது இரு நோக்கங்களை கொண்டது.

அதாவது பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டு பயிற்சிய ளிக்கப்பட்ட ஒட்டுக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு பயிற்சிக் களமாக பனிச்சங்கேணித ்தாக்குதலை ஏற்படுத்துதல்.

பனிச்சங்கேணி கைப்பற்றப்பட்டால் ஒட்டுக் குழு கிழக்கை மீட்கத்தொடங்கி விட்டார்கள் என பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது. ஆனால் தந்திரமாக இவர்களை உள்வாங்கிய புலிகள் ஒரு பெட்டிவடிவில் முற்றுகையிட்டு தாக்கத்தொடங்கினார்கள்.

புலிகளின் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த தளபதி கேணல் சொர்ணம் வழிநடத்த உக்கிரமான எதிர்ச்சமர் ஆரம்பித்தது. சிங்களப்படைக்கும் தமிழ் துரோகக்கும்பலுக்கும் நின்று நிதானித்து சமரை எதிர்கொள்ள நேரம் இருக்கவில்லை. வாகனங்கள், ஆயுதங்கள், இறந்த, காயமடைந்த சகாக்க ளையும் விட்டுவிட்டு முகாமுக்குப் பின்வாங்கி ஓடிவிட்டார்கள். 30 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், 20 இற்கு மேற்பட்ட ஒட்டுக் குழுவினரும் பலியானதுடன் 75 பேர் வரை காயமடைந்தார்கள். இந்த மோதலில் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வந்த மேஜரும் பலியாகிவிட்டார். இராணுவ வாகனங்கள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்ட 81 மி.மீ மோட்டார்கள் 2 உம் அவற்றிற்கான எறிகணைகளும் முக்கியமானவை.

இராணுவத்தின் 11 உடல்களும், ஒட்டுக்குழுவின் 06 உடல்களும் கைப்பற்றப்பட்டதுடன் ஒரு சிப்பாயும் கைது செய்யப்பட்டார். போர்நிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் தெற்கில் அரச படைகள் வலுவுள்ளவர்கள் என ஏற்படுத்தப்பட்ட தோற்றப்பாடு பனிச்ச ங்கேணி தாக்குதல் மூலம் கலைந்து போகாமல் தடுப்பதற்கு அரசும் தென்பகுதி ஊடகங்களும் மிகவும் திட்டமிட்டு செயற்பட்டனர். தாக்குதலை இருட்டடிப்பு செய்ய முயன்றனர், கருணாகுழு தாக்கியதாக செய்தி பரப்பமுனைந்தனர் ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.

எனவே தான் இறந்த சிங்களப் படைகளின் உடல்களை கூட புதைத்து மீண்டும் தோண்டி எடுத்து கையளிக்க வேண்டிய நிலை புலிகளுக்கு ஏற்பட்டது. இறந்த படையினரின் உடல்களை விட தமது அரசியல் நலன்கள் தான் தற்போது சிங்கள இனவாதிகளுக்கு முக்கியமானது. அதற்கு ஒத்திசை வாகவே தென்பகுதி ஊடகங்களும் செயற்பட்டிருந்தன.

கிழக்கில் ஏற்பட்ட தோல்வியையும் வடக்கில் சரி செய்து விடலாம் என எண்ணிய அரசு பளையை கைப்பற்றும் நடவடிக்கைக்கு நாள் குறித்தது. ஓகஸ்ட் 11 ஆம் நாள் படையினர் புலிகள் மீது ஒரு வலிந்த தாக்குதலுக்கு ஆய த்தமான வேளை முகமாலை முன்னரங்கை புலிகள் உடறுத்து தாக்கி இருந்தார்கள். அதற்குப் பதிலடியாக ஒக்ரோபர் 11 ஆம் நாளை தனது தாக்குதலுக்கு அரசு தெரிவு செய்தது. இந்த நாளில் மற்றும் ஒரு விசேடம் உண்டு. அதற்கு முதல் நாள் தான் சிங்கள இராணுவத்தின் 57 ஆவது ஆண்டுவிழா.

2001 இல் தீச்சுவாலை நடவடிக்கையின் போது படையினர் நகர்ந்த அதே பாதையால் இம்முறையும் நடவ டிக்கை ஆரம்பமானது. செறிவான ஆட்டிலறி, பல்குழல் எறிக ணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்களுடன் சிங்களப் படையின் படைப்பிரிவுகள் நகர்ந்தன. புலிகளை பொறுத்தவரை இராணுவத்தின் இந்த நகர்வை முன்கூட்டியே கணித்திருந்தனர். அதை எதிர்கொள்ள வியூகங்களை வகுத்ததுடன் கேணல் கிட்டு ஆட்டிலறி படைப்பிரிவுத்தளபதி கேணல் பானுவும் வடபோர் முனைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நாகர்கோவில் அச்சில் முன்னேறிய படைகள் சிறிது நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், முகமாலை, கிளாலி ஊடாக முன்னேறிய படைகள் புலிகளின் முன்னணி நிலைக்கு உள்வாங்கப்பட்டார்கள். தமது இரண்டாவது நிலைக்கு தந்திரமாக பின்னகர்ந்த புலிகளின் அணிகள் இராணுவத்தை சுற்றிவளைத்து தாக்கத் தொடங்கினார்கள். துல்லியமானதும், மிகச்செறிவானதுமான மோட்டார், ஆட்டிலறித்தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத படையினர் சிதறி கண்ணிவெடி வயல்களின் ஊடாக ஓடியுள்ளார்கள். அதுவே இராணுவத்தின் பேரழிவுக்குக் காரணமாக அமைந்தது.

படையினருக்கு உதவியாக வந்த டாங்கிகளும் தப்பவில்லை இரண்டு ரி-55 ரக பிரதான போர் டாங்கிகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன், மேலும் இரு டாங்கிகள் சேதமடைந்தன. ஐந்து மணிநேரத்தில் முடிந்து போன சமரில், 200 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட, 515 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 75 சடலங்களையும் நூற்றிற்கும் மேற்பட்ட ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியதுடன், ஒரு சிப்பாயும் கைது செய்யப்பட்டார். இவர் சத்தமின்றி நடைபெறும் நாலாம் கட்ட ஈழப்போரில் வடபகுதியில் கைதான முதல் சிப்பாய். முன்னர் கிழக்கில் வாகனேரி, பனிச்சங்கேணி தாக்கு தல்களில் தலா ஒவ்வொரு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே.

முகமாலை சமரில் கனரக ஆயுதங்களின் நேர்த்தியான கையாளுகையும், தளபதிகளின் சிறந்த போர்க்கள நுட்பமும், கனரக ஆயுதங்களின் ஒருங்கிணைந்த பயன்பாடும் புலிகளின் வெற்றிக்குக் காரணமாகியதுடன். அவர்களின் இழப் புக்களையும் வெகுவாகக் குறைத்துள்ளது. 4 துணைப் படையினரும், 18 போராளிகளும் வீரச்சாவைத் தழுவியிருந்தனர். இது ஏனைய சமர்களுடன் ஒப்பிடும் போது குறைவானது.

2000 இல் ஆனையிறவை இழந்த பின்னர் சிங்களப் படை அதை மீட்பதற்கு கொடுக்கும் விலைகள் மிக, மிக அதிகம். தற்போது தென்னிலங்கையைப் பெறுத்தவரை ஆனை யிறவு இராணுவ முக்கியத்துவத்தை விட அரசியல் முக்கியத் துவம் வாய்ந்ததாகவே மாறியுள்ளது.
posted by தமிழினி @ 10:42 PM   0 comments
சிறிலங்கா அரசின் தெளிவான போர் முகம்
மட்டக்களப்பு மாவட்டம் பனிச்சங்கேணி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சி சிறிலங்கா அரசின் போர் முகத்தை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சமாதான முன்னெடுப்புகளுக்கு இவ்வாறான வலிந்த தாக்குதல் என்பது ஒரு போதும் நம்பிக்கையை ஏற்படுத்தமாட்டாது.

எதிர்வரும் 28ம் 29ம் திகதிகளில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவித்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் பாரிய படை நகர்வை மேற்கொண்டமையால் போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் சர்வதேச சமூகத்தை சிங்களப் பேரினவாத அரசு ஏமாற்றுகிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

ஏனெனில், அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் கருதுகிறது.
சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்கான தமது விருப்பத்தை தெரிவித்தனர்.

அந்த நிலையில் சிறிலங்கா அரசு வலிந்த தாக்குதல்களை நிறுத்தி இதயசுத்தியுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அவசியமானது. ஆனால், வன்னிப் பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தினமும் விமானத்தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன. அதே போன்று ஆட்லறி எறிகணைத் தாக்குதல், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் என்பன இடம் பெற்று வருவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திலும் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன.

ஏற்கனவே, சம்பூர் மாவிலாறு படை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் உடமைகளை இழந்து நிர்க்கதியான நிலையில் வாகரைப் பிரதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர். உணவு, உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு கூட சிறிலங்கா அரசு கதவடைப்புச் செய்த நிலையில் பட்டினிச் சாவில் வாழ்ந்த மக்கள் வாகரைப் பிரதேசம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கி தாக்குதல் விமானத் தாக்குதல்களால் மீண்டும் இடப்பெயர்வை சந்தித்துள்ளனர்.

இவ்வாறு இடம் பெயர்ந்துள்ள மக்கள் வெருகல் பகுதியிலுள்ள பால்சேனை வட்டவான் போன்ற இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். உண்மையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களின் பிரச்சினையை சமாதான வழிமுறையில் தீர்க்கும் எண்ணம் இருந்திருந்தால் இவ்வாறான ஒரு நெருக்கடி சூழலை ஏற்படுத்த முனையமாட்டார்கள்.

இருதரப்புக்கு இடையில் மீண்டும் நேரடிப் பேச்சுக்கள் இடம்பெற வேண்டுமானால், போர் நிறுத்தத்தை சிறிலங்கா அரசு முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். போர் நிறுத்த உடன்படிக்கைகயை முழுமையாக துவசம் செய்து கொண்டு ஒரு போதும் பேச்சு மேசையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாது.

புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இயல்பு நிலை உருவாக்கப்படும் பட்சத்தில் மாத்திரமே பேச்சுவார்த்தை நம்பிக்கையை ஏற்படுத்த இடமுண்டு. ஆனால், இன்றுள்ள நிலைமை அவ்வாறில்லை. சிறிலங்கா அரசு தாங்கள் மேற்கொள்ளும் வலிந்த தாக்குதல்களைப் பதில் தாக்குதல் எனத் திரிபுபடுத்திக் கூறுகின்றது.

அவ்வாறெனில் ஏன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை அப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்க வேண்டும்? முகமாலைப் பகுதிக்குக் கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புல்லுமலை அதிரடிப்படை முகாமிற்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பனிச்சங்கேணிப் பகுதிக்குச் செல்வதற்கும் படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

ஆனால், பனிச்சங்கேணியில் படையினரின் வலிந்த தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புச் சமரில் பதினைந்து படைச் சிப்பாய்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதுடன், ஒரு படைச் சிப்பாயை விடுதலைப் புலிகள் உயிருடன் சிறைப்பிடித்துள்ளனர்.

எனவே, யார் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்பதற்கு இந்த விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட படைச்சிப்பாய்களின் சடலங்களும் சிறைப்பிடிக்கப்பட்ட படைச்சிப்பாயும் போதிய ஆதாரமாக உள்ள நிலையில் இன்னுமின்னும் சிறிலங்கா அரசு ஏமாற்றக் கூடாது.

நன்றி - மட்டு ஈழநாதம்
posted by தமிழினி @ 10:37 PM   0 comments
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி