| தொடர்பானவை |
| தொடர்புள்ள விளம்பரங்கள்
|
| ஒலி |
| இன்னமும் இணைக்கப்படவில்லை |
| காணொளி |
| இன்னமும் இணைக்கவில்லை |
| Other things |
|
|
| Other things |
|
|
|
| Sunday, November 19, 2006 |
| யாழ். மக்கள் கொடுக்கும் விலையை விரைவில் தென்னிலங்கை மக்களும் கொடுக்க வேண்டியதிருக்கும்: |
அத்தியாவசியப் பொருட்களுக்காக யாழ். குடாநாட்டு மக்கள் கொடுக்கின்ற விலையை விரைவில் தெற்கு மக்களும் கொடுக்கவேண்டிய நிலையேற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 51 ஆவது ஆண்டு மாநாட்டில் அவர் ஆற்றிய உரை: கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதன் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியை ஒருபோதும் அழித்துவிட முடியாது. அமரர் டி.எஸ்.சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி கடந்த காலங்களில் எனது தலைமையின் கீழ் பாதுகாக்கப்பட்டது போல எதிர்காலங்களிலும் பாதுகாப்பேன்.
கட்சியில் நிலவுகின்ற முரண்பாடுகளை மறந்து பேச்சுவார்த்தை நடத்தி சகலரையும் ஐக்கியப்படுத்தும் அதேவேளை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் சுமூகமாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதுடன் அவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தி விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப்பீடமேறும்.
கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகளை ஏற்படுத்தி கட்சியை அழிப்பதற்கு எவராலும் முடியாது. முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும்.
நாட்டின் சுதந்திரத்திற்காகவும் ஐக்கியத்திற்காகவும் செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் ஒன்றில் தோல்வியடைந்தபோது ஐக்கிய தேசியக் கட்சியின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டுவிட்டதாக பண்டாரநாயக்க கூறினார்.
ஆனால் அந்த ஆணி அடிக்கப்பட்டதன் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அதேபோன்று எமது கட்சியை எவராலும் அழிக்க முடியாது.
நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் கூறியதுபோன்று யாழ். குடாநாட்டு மக்கள் பட்டினி சாவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். தெற்கில் எங்கு, எப்போது குண்டு வெடிக்கும் என்ற பயத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களுக்காக யாழ். குடாநாட்டு மக்கள் கொடுக்கின்ற விலையை விரைவில் தெற்கு மக்களும் கொடுக்க வேண்டிய நிலையேற்படும்.
நான் பிரதமராக இருந்தபோது நிதி தொடர்பான நிர்வாகத்தை நாடாளுமன்ற அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தேன். ஆனால் 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் அந்த அதிகாரம் யாரிடம் இருக்கின்றது? என்று நாடாளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ தெரியாது. இந்நிலைமை தொடர்ந்தால் மக்கள் தற்போது செலுத்துகின்ற கடன் தொகை மேலும் அதிகரிக்கும்.
ஐ.தே.க. தேர்தலில் தோல்வியடைந்த போதெல்லாம் கட்சி இல்லாமல் போய்விடும் என்று கூறினார்கள். கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது, இல்லாமல் போகவில்லை. ஆனால் நாடு இல்லாமல் சென்றது. கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் சில யோசனைகள் இருக்கின்றன. அந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டபின்னர் அது தொடர்பாக பேச்சு நடத்தி ஐ.தே.க.வினை மீண்டும் பெரும்பான்மை கட்சியாக மாற்றி ஐ.தே.க. யுகத்தையேற்படுத்தி ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்றார் ரணில். |
posted by தமிழினி @ 8:25 PM  |
|
|
|
|
தொடர்பானவை |
|
|
| என்னைப் பற்றி |
|

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
|
| முன்னைய பதிப்புக்கள் |
|
| பெட்டகம் |
|
| தொடுப்புக்கள் |
|
|
| Template by |
|
|