| தொடர்பானவை |
| தொடர்புள்ள விளம்பரங்கள்
|
| ஒலி |
| இன்னமும் இணைக்கப்படவில்லை |
| காணொளி |
| இன்னமும் இணைக்கவில்லை |
| Other things |
|
|
| Other things |
|
|
|
| Monday, November 20, 2006 |
| இணைத் தலைமைகளைச் சமாளிக்க |
இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமை களின் மிக முக்கிய கூட்டம் நேற்று அமெரிக்காவின் வாஷிங் ரன் நகரில் நடைபெறவிருக்கையில் திடீரென முக்கிய அறி விப்பு ஒன்றை இலங்கை ஜனாதிபதியின் செயலகம் அதிரடி யாக விடுத்திருக்கிறது.பாதுகாப்புக் காரணம் என்ற சாட்டைக் கூறி கடந்த நூறு நாள்களுக்கு மேலாகத் தான் மூடி வைத்திருக்கும் ஏ9 பாதை ஊடான யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் போக்குவரத்தை ஒரேயொரு ஒரு தடவை திறந்து விடுவதற்குப் பெருமனது பண்ணி அனுமதி தரப்போவதான அரச அறிவிப்பே அது.
யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்த ஏற் பாடுகளின்படி ஏ9 பாதை ஊடான இந்தப் போக்குவரத்தைத் திறந்து விடுவது இலங்கை அரசத் தரப்பு எழுத்து மூலம் ஒப்புக் கொண்ட கடப்பாடாகும்.அந்தக் கடப்பாட்டைத் திடீரென நிறைவேற்ற நடை முறைப்படுத்த மறுத்து, யாழ். குடாநாட்டில் பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கியதன் மூலம், இலங்கைத் தமிழ் மக் களின் விசனத்துக்கும் சீற்றத்துக்கும் மட்டுமல்லாமல், சர்வ தேச சமூகத்தின் எரிச்சலுக்கும் இலங்கை அரசுத் தலைமை உள்ளாகியுள்ளது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் பேரில் கடந்த மாத இறுதியில் ஜெனிவாவில் இலங்கை அரசுத் தரப்புக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதிப் பேச்சு கள் முன் நகர்வேதுமின்றி பயனேதும் தராமல் முடிவுற்ற மைக்கும், இவ்வாறு யுத்தநிறுத்த ஒப்பந்தப்படியான தனது கடப்பாட்டை நிறைவு செய்யமறுத்து, ஏ9 பாதையை மூடி வைப்பதில் உறுதியாக இருந்த இலங்கையின் பிடிவாதப் போக்கே காரணமாக அமைந்தது.தனது இராணுவத் தந்திரோபாய நோக்கங்களுக்காக, இவ் வாறு மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் ஒரு நெருக்கடியை இலங்கை அரசுத்தரப்பு விடாப்பிடியாக உருவாக்கி நிற்கின் றமை, சர்வதேச அதிருப்திக்கும் எரிச்சலுக்கும் உள்ளாகியிருக் கின்றது.
இந்நிலையில்தான் கடந்த மாத இறுதியில் பயனேதுமின்றி முடிவடைந்த "ஜெனிவா 2' பேச்சுகள் குறித்தும் அதன் தொடராக எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன நேற்று வாஷிங்ரனில் கூடவிருந்தன.இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கையில் இலங்கையின் வடக்கில் நிலவும் மிகமிக அசாதாரணமான மோசமான நெருக் கடியான நிலைமையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி, இணைத் தலைமைகளின் அவசரத் தலையீட்டைக்கோரி, இறுதி நேர விண்ணப்பம் ஒன்றை யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் அடிகள் இணைத்தலைமைகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
""யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத் தும் வகையிலும் யாழ். மக்களைத் திறந்த வெளிச் சிறையில் அடைப்பதினின்றும் விடுவிற்பதற்காகவும் வடக்கில் பட்டி னிச் சாவு மற்றும் போஷாக்கின்மை போன்ற மனிதப் பேரவ லங்களைத் தவிர்ப்பதற்காகவும் குடாநாட்டு மக்களுக்கு நேர்ந்துள்ள மிகக் கொடூரமான நெருக்கடியிலிருந்து அவர் களை மீட்பதற்காகவும் ஏ9 பாதையைத் திறக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு இணைத் தலைமைகள் அழுத்தம் கொடுப்பது அத்தியாவசியமானது'' இவ்வாறு யாழ். மக்களின் சார்பில் பகிரங்க வேண்டு கோளை இணைத் தலைமைகளுக்கு முன்வைத்திருக்கிறார் யாழ். ஆயர்.இராணுவத் தந்திரோபாய நோக்கங்களுக்காக ஏ9 பாதை யைத் தான் மூடி வைத்திருப்பதும், அதனால் எழுந்துள்ள மனி தப் பேரவலமும், இவ்விடயத்தில் தான் வெளிப்படுத்தும் பிடி வாதமும் சர்வதேச மட்டத்தில் தனக்கு எதிராக மிகவும் மோசமான கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி வருவதை உணர்ந்துகொண்ட இலங்கை அரசு, அதைச் சமாளிப்பதற்காக இப்போது "அந்தர் பல்டி' அடித்திருக்கிறது.நேற்றுக் கூடவிருந்த இணைத்தலைமைகளின் கூட்டத்தின் முடிவில், இவ்விடயத்தில் தனது பிடிவாதப் போக்கு மிக மோசமாகவும், காட்டமாகவும் விமர்சிக்கப்படும் என்பதை உணர்ந்துகொண்ட இலங்கை அரசு, அதைத் தவிர்க்கச் செய்யும் இறுதி நேர எத்தனமாக சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டது.
அதன்படி""சமயத் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் விடுத்த வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் வாரங்களில் வடக்கிற்குக் கப்பலில் பொருள்களைக் கொண்டு செல்வதைப் பாதிக்கும் வகையான சீரற்ற காலநிலை நிலவும் என்பதாலும் முகமாலை ஊடாக ஏ9 பாதையில் ஒரே தடவையில் பொருள்களை வடக்கே கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.'' என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏ9 பாதையை யுத்த நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு முர ணாக மூடி, வடக்கில் பெரும் மோசமான மனிதப் பேரவலத்தை ஏற்படுத்திய தனது கொடூரப் போக்குக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு திரண்டு வந்துள்ள நிலையில் இது விடயத்தில் உலகின் சீற்றம், இணைத்தலைமை நாடுகளின் கூட்ட முடிவில் கூட்டறிக்கையாக வெளிவர இருக்கையில் அதைச் சமாளித்துத் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி நேரத் தந்திரமாக இவ்வாறு ஏ9 பாதையை ஒரு தடவை மட்டும் திறக்கும் "தாராளப் போக்குக்கு' இறங்கி வந்திருக்கின்றது இலங்கை அரசு.
ஆனாலும், இவ்விடயத்தில் காதில் பூச்சுற்றுவது போன்ற இலங்கையின் இந்தத் தந்திரோபாயக் காய் நகர்த்தல் இறுதிநேர எத்தனம் இது போன்ற பல விடயங்களையும் கையாண்டு தேர்ந்த இணைத்தலைமை நாடுகளிடம் பலிக்கும் என நம்புவதற்கு இடமில்லை.
இன்று இப்பத்தியை வாசிக்கும் இச்சமயத்தில் இவ்விடயம் பற்றிய இணைத்தலைமை நாடுகளின் நிலைப்பாடு கூட்டறிக்கை வடிவத்தில் வெளியாகி, உண்மையை வெளிப்படுத்தி நிற்கும் என எதிர்பார்க்கலாம்.அது மட்டுமல்ல வாகரையில் தமிழர்கள் அனுபவிக்கும் நெருக்கடிகள், தமிழர் தாயகமான வடக்குகிழக்கைப் பிரிப்பதற்குத் தென்னிலங்கை மேற்கொண்டுள்ள தந்திரங்கள், கொழும்பு அரசின் இராணுவ முனைப்புப் போக்கு, சிறுவர்களைப் பலவந்தமாகப் படைதிரட்டும் அரச இராணுவ மற்றும் கருணா குழுவின் கூட்டுச் சதி நடவடிக்கைகள் போன்றவை குறித்தெல்லாம் தமது கருத்துகளை இணைத்தலைமைகள் வெளிப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கலாம். |
posted by தமிழினி @ 8:09 PM  |
|
|
|
|
தொடர்பானவை |
|
|
| என்னைப் பற்றி |
|

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
|
| முன்னைய பதிப்புக்கள் |
|
| பெட்டகம் |
|
| தொடுப்புக்கள் |
|
|
| Template by |
|
|