| தொடர்பானவை |
| தொடர்புள்ள விளம்பரங்கள்
|
| ஒலி |
| இன்னமும் இணைக்கப்படவில்லை |
| காணொளி |
| இன்னமும் இணைக்கவில்லை |
| Other things |
|
|
| Other things |
|
|
|
| Thursday, November 23, 2006 |
| இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கானசூழ்நிலையை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் - மு.கருணாநிதி |
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கான சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த கருணாநிதி அங்கு மேலும் கூறியதாவது:
அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதையும் அவர்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து இம்சைப்படுத்துவதையும் இலங்கை அரசு நிறுத்தி சமாதானத்திற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இப்பிரச்சினையை மத்திய அரசாங்கத்தின் முக்கிய கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண சமாதான பேச்சுவார்த்தை மூலமான உபாயங்களை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். |
posted by தமிழினி @ 12:41 AM  |
|
|
|
|
தொடர்பானவை |
|
|
| என்னைப் பற்றி |
|

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
|
| முன்னைய பதிப்புக்கள் |
|
| பெட்டகம் |
|
| தொடுப்புக்கள் |
|
|
| Template by |
|
|